மலையாள படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ். இவர் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானாசேர்ந்தகூட்டம், சர்க்கார், பென்குயின் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டவர்.
இவர் மகாநதி படத்திற்காக அண்மையில் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.இவர் தற்பொழுது மிஸ் இந்தியா அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் உடல் எடையை குறைத்து விட்டதால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் அடுத்ததாக படம் நடிக்க போவதில்லை என்ற முடிவு எடுத்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் அவரது திருமணம் நடக்க இருக்கிறது என்றும் அதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்க நினைக்கிறார் என்ற பேச்சுக்கள் அடிபடுகிறது.
ஆனால் தமிழ் தெலுங்கு ஆகிய சினிமாக்களில் நல்ல பெயர் எடுத்துள்ள இந்த நேரத்தில் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.