Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ராம் சரணுடன் நடனம் ஆடிய கீர்த்தி சுரேஷ்.

keerthy-suresh-post-goes-viral

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் மேடையில் சந்திரபோஸ் -எம்.எம்.கீரவாணி இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், ராம் சரணுடன் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.