தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகும் அணைத்து படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எந்தளவிற்கு இருக்கிறது என்று தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அந்த வகையில் தமிழ் திரையுலகில் முதல் நாள் வசூலில் கிங் என்றால் தற்போது தளபதி விஜய் தான். ஆம் தளபதி விஜய் நடித்து வெளியான சர்கார் திரைப்படம் தான் ரூ.31 கோடி முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ் திரையுலகை போல் கேரள திரையுலகில் எந்த தமிழ் நடிகரின் படம் டாப் இடத்தில் இடம்பிடித்துள்ளது என்று தெரியுமா? இதோ இங்கு பார்த்த தெரிந்துகொள்ளலாம்.
கேரளா திரையுலகின் டாப் 5 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் :
1. ஓடியன் = ரூ. 7.25 கோடி
2. லூசிபர் = ரூ. 6.37 கோடி
3. சர்கார் = ரூ. 6.1 கோடி
4. பாகுபலி 2 = ரூ. 5.45 கோடி
5. காயங்குளம் கொச்சினி = ரூ. 5.2 கோடி
இதில் டாப் 5 இடத்தில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு தமிழ் நடிகரின் படம் விஜய்யின் சர்கார் மட்டும் தான் என தெரியவந்துள்ளது.