Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினி நடித்த ஜெயிலர் படத்தைக் குடும்பத்துடன் பார்த்த கேரளா முதலமைச்சர்.!! வைரல் வீடியோ இதோ

kerala cm watched jailer movie with our family latest update

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், ஜாக்கி ஷெராப், விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து வரும் இப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து பல முன்னணி பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் குடும்பத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் நெல்சனை பாராட்டியதை தொடர்ந்து தற்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் ஜெயிலர் படத்தை குடும்பத்துடன் கண்டுகளித்துள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.