Tamilstar
Tamil News சினிமா செய்திகள்

பிரபல ஈழத்து திரைப்பட இயக்குனர் கேசவராஐன் காலமானார்.

ஈழத்து திரைப்பட இயக்குனரும், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவை சேந்தவருமான திரு நவரட்ணம் கேசவராஐன் அவர்கள் 09.01.2021 (சனிக்கிழமை) இன்று அதிகாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

ஈழத்திரைப்பட இயக்குனரான இவர் 1986ம் ஆண்டு தாயகமே தாகம், மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற படங்களை இயக்கினார். அதன் விளைவாக தமிழ் தேசிய தலைவரின் பாராட்டை பெற்றதுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டார்.

பல வீதி நாடகங்கள் மேடை நாடகங்களை தயாரித்து வழங்கிய இவர் பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், கடற்புலிகளின் 10ஆண்டு நிறைவை முன்னிட்டு கடலோரகாற்று, அம்மா நலமா போன்ற படங்களை இயக்கியுள்ளதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.

அத்துடன் ஈழத்தில் தயாரிக்கப்படும் பல்வேறு திரைப்படங்களை ஊக்கிவிப்பதுடன் அதில் பல பாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு டொராடோவில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் தெரிவுசெய்யப்பட்ட எழில் குறுந்திரைப்படத்தில் இவரின் நடிப்பு அப்படத்திற்கு மிகவும் வலுச்சேர்த்தது.

2009 இன் பின்னர் முன்னால் போராளிகள் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு பனைமரக்காடு திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார், இறுதி யுத்தம் வரை தமிழீழ மக்களுடன் பயணித்தவர்.