கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை சுவைத்தது.
மேலும் மூன்றாம் பாகமும் வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் எடிட்டர் குறித்த சுவாரஸ்ய தகவல் தெரியவந்துள்ளது. கே ஜி எஃப் 2 படத்திற்கு 19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி என்ற சிறுவன் தான் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
கேஜிஎஃப் படத்தின் பேன் மேட் டிரெய்லரை இவர் எடிட் செய்த இவர் இயக்குனரை கவர்ந்த செய்த காரணத்தினால் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலரும் இது குறித்து ஒரு பேன் இந்தியா படத்திற்கு 19 வயது எடிட்டரா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
