Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

KGF 2 வால் பீஸ்ட் படத்தை ஓரம்கட்டிய தியேட்டர்கள்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

KGF 2 Movie Theaters Count Increase

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து மறுநாள் கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழகத்தில் பீஸ்ட் படத்துக்கு 800 திரையரங்குகள் கிடைத்தன. ஆனால் கே ஜி எஃப் 2 படத்திற்கு வெறும் 250 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தை காட்டிலும் மக்கள் கே ஜி எஃப் 2 படத்தினை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை தூக்கி விட்டு கே ஜி எஃப் 2 படத்தை திரையிட தொடங்கி உள்ளனர். படம் வெளியான முதல் நாளே கே ஜி எஃப் 2 படத்திற்கு மேலும் 50 திரையரங்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது.

தொடர்ந்து பல இடங்களில் பீஸ்ட் படத்தை தூக்கி விட்டு கே ஜி எஃப் 2 படத்தினை திரையிட தொடங்கி இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KGF 2 Movie Theaters Count Increase
KGF 2 Movie Theaters Count Increase