Tamilstar
News Tamil News

வசூல் வேட்டைக்கு தயாராகும் யாஷ்.. வெளியானது கே ஜி எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி!

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப்.

தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் வெளியான இப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது தமிழில் இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில் நடிகர் யாஷ் அவர்களுடன் இணைந்து பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் எல்லையில்லா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த பிரமாண்ட படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியுள்ளார். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.