Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கே ஜி எஃப் 3 படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட பிரசாந்த் நீல்.

kgf 3 movie latest update viral

“இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்துள்ளது.இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பிரசாந்த் நீல் ‘கேஜிஎப் 3’ குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், \”கேஜிஎப் மூன்றாம் பாகம் உருவாவது உறுதி. அதற்கான கதையும் ரெடியாகிவிட்டது. அதற்கான அறிவிப்பை வெளியிடும் முன் நாங்கள் கதையை தயார் செய்ய முடிவு செய்தோம். யஷ் மிகவும் பொறுப்பான நபர், வெறும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே எதையும் செய்யமாட்டார். ‘கேஜிஎப்’ மூன்றாம் பாகத்தை நான் இயக்குவேனா இல்லையா என்று தெரியாது. ஆனால், அதில் கண்டிப்பாக யஷ் இருப்பார்\” என்று தெரிவித்தார்.”,

kgf 3 movie latest update viral
kgf 3 movie latest update viral