Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாஸ்டர் சாதனையை முறியடித்த கேஜிஎப் 2 டீசர்

KGF Chapter 2 Teaser creates a new record

2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது.

இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளார் பிரசாந்த் நீல். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. வெளியானது முதல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற இந்திய பட டீசர் என்ற சாதனையை கேஜிஎப் 2 படைத்துள்ளது.

இதற்கு முன் 1.85 மில்லியன் லைக்குகளை பெற்று மாஸ்டர் படம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது கேஜிஎப் 2 டீசர் 10 மணிநேரத்தில் 2 மில்லியன் லைக்குகளை பெற்று அதனை முறியடித்துள்ளது. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.