Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷுடன் இணையும் கே.ஜி.எஃப் பட நடிகர்?

KGF film actor to team up with Dhanush

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி’. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் அடுத்த வருடம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

இதனிடையே தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பூஜையில் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தனுஷ்-சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சய் தத்தை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

KGF film actor to team up with Dhanush
KGF film actor to team up with Dhanush