சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
இந்நிலையில், கே.ஜி.எப். படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு, இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் அவர் அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.