Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

KGF படத்தின் கதை என்னுடைய மகன் கதை.. பெண் பரபரப்பு புகார்

KGF Movie Story Issue Update

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி அதுவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்க ஹாம்போலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படத்தின் கதை என்னுடைய மகன் உடையது என பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது என்னுடைய மகன் கேஜிஎப்பில் பணியாற்றினார். ஒரு கூட்டத்தைக் கூட்டி தங்கத்தைத் திருடும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தான். போலீசார் அவனை பல வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொன்று விட்டனர். அந்தக் கதையைத்தான் தற்போதைய கேஜிஎப் படக்குழுவினர் என்னுடைய அனுமதி இல்லாமல் எடுத்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் என்னுடைய மகனை தவறாக சித்தரித்து உள்ளனர் என புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் படக்குழுவினர் இது உண்மை இல்லை என கூறியுள்ளனர்.

KGF Movie Story Issue Update
KGF Movie Story Issue Update