Tamilstar
News Tamil News

KGF 2 செம்ம மாஸ் போஸ்டர் லீக் ஆனதா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

கன்னட சினிமா தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை எட்டியது KGF மூலம் தான். இப்படம் உலகம் முழுவதும் ரூ 215 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இப்படம் கன்னடம் தாண்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி வரை பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய படம்.

அதோடு டிஜிட்டல் தளத்தில் அதிகம் பேர்த்த படமும் இவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் இப்படம் கர்நாடகாவில் மட்டுமே ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது.

பாலிவுட்டில் பெரியளவில் ப்ரோமோஷன் இல்லாம்லேயே ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

தமிழில் இப்படத்தை விஷால் வெளியிட்டார், இங்கும் இப்படம் ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

KGF இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பெரியளவில் எடுத்து வருகின்றனர், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளிவந்தது.

இந்நிலையில் இப்படத்தில் சஞ்சய் தத் ஆதிரா கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவரின் லுக் லீக் ஆனதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது, இதோ…ஆனால் இது உண்மையா என்று தெரியவில்லை.