கன்னடத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.
ஏப்ரல் 13-ஆம் தேதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் நிலையில் அடுத்த நாள் இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கேஜிஎஃப் 2 படத்தின் ட்ரெய்லரை பாராட்டி நெல்சன் திலீப் குமார் பதிவு செய்ய அதற்கு பிரஷாந்த் நீல் ரிப்ளை செய்துள்ளார். அதாவது தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்க முடியவில்லை. இதை பெரிய திரையில் பார்க்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பிகில் படத்திலிருந்து பிரசாந்த் நீல் முதல் நாள் முதல் காட்சி பார்த்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தளபதி விஜய் ரசிகர்கள் பலரும் விஜயுடன் இணைந்து படம் பண்ணுங்கள் உங்களது கூட்டணிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறி வருகின்றனர்.
