கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான இவர் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎப்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. பாகுபலி படத்தைப் போல ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இப்படம் இருந்து வருகிறது.
ராக்கி பாய்-ஐ மீண்டும் எப்போது திரையில் பார்ப்போம் என ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் தொடங்கி விட்டதாக இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.
மேலும் கேஜிஎப் 2 படத்தில் சஞ்சய் தத் இணைந்திருந்த நிலையில் அவரைத் தொடர்ந்து தற்போது பிரபல முன்னணி நடிகரான பிரகாஷ்ராஜிம் இணைந்துள்ளார்.
இது குறித்தும் இயக்குனர் பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
After 6 full months…the COVID break is broken…Shooting today! Feels like a rebirth! Guess which film???!!!😊😊😊 pic.twitter.com/nHRiiIejMX
— Malavika Avinash (@MalavikaBJP) August 26, 2020