Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காளி போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்த குஷ்பு.. வைரலாகும் பதிவு..

Khushbu Sundar about Kaali Poster

தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.

லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை சமூக வலைத்தளத்தின் வாயிலாக விளக்கமும் அளித்துள்ளர். இந்நிலையில், நடிகை குஷ்பு, லீனா மணிமேகலை, காளி ஆவணப்படத்தின் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.