தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் இவரது நடிப்பில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி “குஷி” திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. விஜய் தேவர்கொண்ட கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து குஷி திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, குஷி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனை விஜய் தேவர் கொண்ட அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டருடன் பதிவிட்டு தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது
Back to entertaining the Families ❤️#Kushi is ready for you all – U/A
We are Just 9 days away. pic.twitter.com/R6JEutsO5e
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 23, 2023