தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் கிங் காங். வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் படங்களை தலை காட்டாமல் இருந்து வருகிறார்.
இவரது மூத்த மகள் சக்தி பிரியா பிளஸ் டூ தேர்வு எழுதி இருந்த நிலையில் தற்போது அவரது மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 600க்கு 404 மதிப்பெண் எடுத்துள்ளார்.
இதனால் நெகிழ்ச்சி அடைந்த கிங் காங் எங்களது மகள் பெருமை சேர்த்துள்ளார். அவளுக்கு பிடித்த படிப்பை படிக்க வைத்து அவளது கனவை நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.