விக்ரம் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ஜெமினி. இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இருந்து தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண் ராத்தோட்.
இதனை சுந்தர். சி இயக்கத்தில் வெளியான வின்னர், கமலின் அன்பே சிவன், மற்றும் அஜித் நடிப்பில் வெளியான வில்லன் திரைப்படங்கள் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி போட்டு நடித்து வந்தார் கிரண்.
இதன்பின் கதாநாயகியாக தனது மார்க்கெட்டை இழந்து, துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஏன் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்கள் அம்மா கதாபாத்திரங்களில் கூட நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை கிரண் ராத்தோட். சமீப காலமாக பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் ரசிகர்கள் முகம் சுளிக்கும் வகையில், படு மோசமான சர்ச்சைக்குரிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.