Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோலமாவு கோகிலா இந்தி ரீமேக் – நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

Kolamavu Kokila Hindi Remake

நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘கோலமாவு கோகிலா’. தமிழில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவு வந்தது.

இந்நிலையில், அதில் வலிமை பட தயாரிப்பாளரின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். தனுஷை ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல் ராய் இப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இப்படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் வருகிற ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ளது. ஒரே கட்டமாக தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளார்களாம். தமிழைப் போலவே இந்தியிலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.