Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஏழை மக்களுக்காக தொடர்ந்து உதவும் kpy பாலா.மகிழ்ச்சியில் மக்கள்

kpy bala-provided-an-ambulance-to-a-hill-village-near-alankayam

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 170-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 750 பேர் வசித்து வருகின்றனர். இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் அன்றாட தேவைக்கும், மருத்துவ தேவைக்கும் 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவ வலி காரணமாக அவதிப்பட்டார்.

அவரை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்று அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இது குறித்து செய்திகள் சமூக வளைதளங்களில வெளியானது. இந்நிலையில் சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்றார். அங்கே அவருக்கு மலை கிராம மக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.

kpy bala-provided-an-ambulance-to-a-hill-village-near-alankayam
kpy bala-provided-an-ambulance-to-a-hill-village-near-alankayam