கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் பரிச்சயமானவர் தீனா. தனது நகைச்சுவை திறமையால் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றினார்.
கே.பி.ஒய் நிகழ்ச்சியை தொடர்ந்து சிரிப்புடா, எங்கிட்ட போதாதே, கே.பி.ஒய் சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலக்கிக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் வந்த சினிமா வாய்ப்பை பயன்படுத்து தனுஷுடன் இணைந்து பா.பாண்டி படத்தில் தனுஷின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தும்பா, கைதி தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் வரை நடித்துள்ளார். இதுமட்டுமின்றி அவ்வப்போது விஜய் தொலைக்காட்சிகளில் தலைகாட்டி வருகிறார்.
சமீபத்தில் தனுஷ் போல் வேடமிட்டு, போட்டோ ஷூட் நடத்தி நம்மை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் கோட் சூட் என மிகவும் வித்யாசமான லுக்கில் மிரட்டி எடுக்கிறார் தீனா.
இதோ லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் :
— Dheena Actor (@DheenaActor) October 14, 2020