Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொண்டாட்டி கிட்ட அடி.. ஆங்கரை சொர்ணாக்கா என கலாய்த்த குரோஷி – வைரலாகும் கலக்கல் ஷாப்பிங் வீடியோ!

kpy kuraishi shopping velavan stores

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றவர் குரோஷி‌. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.

தற்போது இவர் சென்னையில் தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடையில் ரம்ஜானுக்காக ஸ்பெஷல் ஷாப்பிங் செய்துள்ளார். அவரோடு தொகுப்பாளினி ஸ்வாதியும் இந்த ஷாப்பிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

ஷாப்பிங்கின் போது கறிவேப்பிலை மறந்து விட்டு போனா கூட என் பொண்டாட்டி என்னை அடிப்பா எனவும் ஸ்வாதியை சொர்ணாக்கா எனவும் கலாய்த்துள்ளார். சுவாதியும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் குரோஷியை கலாய்த்து எடுத்துள்ளார்.

இந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.