Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தர்.சி அடித்து விட்டாரா?.. குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு

kushboo latest tweets

நடிகை குஷ்பு 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததை போல தற்போது அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு. சமீபத்தில் இவர் உடல் இடையை குறைத்து கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் சில ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கண்ணத்தில் யாரோ அடித்தது போன்று வீரிய கோவத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுந்தர்.சி அடித்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு வேளை இந்த புகைப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற வன்கொடுமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பதிவிட்டிருக்களாம் என சில பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவிற்கான விளக்கத்தை விரைவில் குஷ்பு அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.