Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“லேபிள்” என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தம். வைரலாகும் தகவல்

label-video-goes-viral update

“பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘லேபில்’. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான ‘லேபில்’ தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.இந்நிலையில், லேபில் என்றால் என்ன என்பது குறித்து பொது மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஒரு சிலர், லேபில் என்பது புத்தகத்தில் ஒட்டுவது என்றும் துணியுடன் வருவது என்றும் கூறினர். இதே கேள்வியை வட சென்னை மக்களிடம் கேட்டபோது அவர்கள், \”லேபில் என்பது ஒரு கெத்து. இந்த இடத்தில் யார் பெரிய ஆளோ அவரே லேபில். வட சென்னையை பொறுத்தவரை யார் லேபில் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொருவர் இருப்பார்கள். நாம் யாரை பார்த்து பயப்படுகிறோமோ அவர்தான் லேபில்\” என்று கூறினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. “,

https://twitter.com/disneyplusHSTam/status/1713895449860739330