Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இன்று தனி விமானத்தில் கேரளாவுக்கு பறந்து சென்ற நடிகை நயன்தாரா, ஐயா படத்திற்காக எப்படி தமிழ்நாட்டுக்கு வந்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக மற்றும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்திலும், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாட தனது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கேரளாவிற்கு பறந்து சென்றார்.

ஆனால் இதே நயன்தாரா தமிழில் முதன் முறையாக அறிமுகம் ஆன படம் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா.

இப்படத்திற்காக கேரளாவில் இருந்து தனது தாய் தந்தையுடன் அரசு பேருந்தில் பயணித்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

இதில் எப்படி நடிகை நயன்தாரா தனது கடின உழைப்பால் தற்போது இந்த மாபெரும் இடத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.