நயன்தாரா தென்னிந்தியாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர். அதிலும் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று நல்ல ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அதன் காரணமாக இவர் சோலோ ஹீரோயின் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் கொரியன் படம் ஒன்றின் ரீமேக் என கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் நயன்தாரா ஹீரோக்களுக்கு நிகராக ஒரு சண்டைக்காட்சி ஒன்றில் நடித்துள்ளாராம்.
அந்த காட்சியில் டூப் போடாமல் இவர் நடித்து அசத்தியுள்ளாராம். அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறும் என கூறப்படுகிறது.