Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரே நாளில் வெளியாகபோகும் 4 படங்கள்..உங்க ஃபேவரிட் படம் என்ன கமெண்ட் பண்ணுக

lal-salaam-clash-with-3-movies update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் நீண்ட நேரம் வரும் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதே தேதியில் மேலும் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அதன்படி ஜெயம் ரவியின் சைரன், மணிகண்டனின் லவ்வர் மற்றும் கவினின் ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்கள் மோத உள்ளன. இந்த நான்கு படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்டில் சொல்லுங்க.

lal-salaam-clash-with-3-movies update
lal-salaam-clash-with-3-movies update