ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன.
இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது பின்னர் ஒரு சில காரணங்களால் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.லால் சலாம் போஸ்டர்இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘லால் சலாம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Get ready to stroll through the rural musical streets! 🎵 LAL SALAAM's 2nd single, drops this Monday, 15th Jan! Stay tuned for this soulful melody! 🎬✨
An @arrahman musical 🎹
Lyrics ✍🏻 @KaviKabilan2
Singer 🎤 @sidsriram
Music on @SonyMusicSouth 💿🎶#LalSalaam 🫡… pic.twitter.com/XlhLpvorJb— Lyca Productions (@LycaProductions) January 13, 2024