Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லால் சலாம் படத்தின் “ஜலாலி”பாடலின் லிரிக் வீடியோ வைரல்

lal-salam-movie latest update

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன.

இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜலாலி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சரத் சந்தோஷ் பாடியுள்ள இந்த பாடலில் ‘ஏய் நீ ஆட்டாத வால்.. கிட்ட வந்தா நீ ஹலால்’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.