தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படகுழு வெளியிட்டு படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மும்பையில் ரஜினிகாந்த் தொடர்பான சண்டை காட்சியின் படப்பிடிப்பு 3 நாட்கள் நடைபெற்றதாகவும், அடுத்த சண்டை காட்சியின் படப்பிடிப்பிற்காக படக்குழு மைசூர் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.