தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து அவரது மகளும் பிரபல இயக்குனராக திகழும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது செஞ்சி மற்றும் அத்தியூர், சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமங்களில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் நேற்றைய தினம் தனியார் பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு சோ.குப்பம் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இதில், விஷ்ணு விஷால் மற்றும் செந்தில் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
![lal-salam-movie-shooting-update](https://b3585245.smushcdn.com/3585245/wp-content/uploads/2023/04/Aishwaryas-Laal-Salaam-to-have-cameo-of-Rajinikanth-Image_-Aishwarya-Rajinikanth_Twitter-2.jpg?lossy=2&strip=1&webp=1)
lal-salam-movie-shooting-update