Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெற்றிகரமாக நிறைவடைந்த லால் சலாம் படத்தின் ஷுட்டிங். கேக் கொண்டாடிய படக்குழு

lal-salam-movie-team-celebrate-video

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி பெண் இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் ரஜினியின் மூத்த மகளான இவர் மூணு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களை இயக்கி இருந்த இவர் தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் ரஜினி சிறப்பான கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் தொடங்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து தற்போது 34 நாட்கள் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை படகுழு கேக் வெட்டி செலிப்ரேட் செய்துள்ளனர். அதன் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது அது தற்போது வைரலாகி வருகிறது.