ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘லால் சலாம்’ திரைப்படத்தின் டீசர் 12-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Adding a spark to your Diwali celebration 🪔✨
Get ready, #LalSalaam teaser releasing on Nov 12 at 10:45AM
In Cinemas 📽️ PONGAL 2024 Worldwide ☀️🌾 Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada!@rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl… pic.twitter.com/Y3zL91Wver
— Red Giant Movies (@RedGiantMovies_) November 10, 2023