இந்திய திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். 92 வயதாகும் இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் பல ஆயிரக்கணக்கான பாடல்களைப் இவர் பாடியுள்ளார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசு மரியாதையோடு இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பல மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ள இவர் தமிழ் மொழியில் மூன்று பாடல்களை மட்டும் தான் பாடியுள்ளார். அவை எந்தெந்த பாடல்கள் என்பதைப் பார்க்கலாம் வாங்க.
1. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் இடம்பெற்ற வளையோசை கலகலவென என்ற பாடலை பாடியவர் லதா மங்கேஷ்கர் தான்.
2. இளையராஜா இசையில் வெளியான வெளியான என் ஜீவன் பாடுது என்ற படத்தில் எங்கேயோ என் ஜீவன் அழைத்தது என்ற பாடல் பாடியிருந்தார்.
3. அதேபோல் இளையராஜா இசையில் வெளியான இன்னொரு படமான ஆனந்த் என்ற படத்தில் ஆராரோ ஆராரோ என்ற பாடலை பாடியிருந்தார். தமிழில் இவர் பாடிய முதல் பாடல் இதுதான்.
