தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக அஜித் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்த நிலையில் படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அஜித் மற்றும் திரிஷா கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் நிலையில் இருவரும் ட்ரிப் ஒன்றிற்கு செல்லும் போது அங்கே த்ரிஷா காணாமல் போகிறார்.
எதிர்பாராத விதமாக இவர் வில்லன் குரூப்பின் சிக்கிக் கொள்ள அஜித் மனைவியை எப்படி காப்பாற்றுகிறார்? அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? வில்லன் குரூப்பின் நோக்கம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்ன தகவல்கள் வெளியாகி உள்ளன.