Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுதந்திர தின விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை

latest news about actor kamal hassan

நமது இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஏராளமான திரைப் பிரபலங்கள், தங்களது டிவிட்டர் ப்ரோஃபைல் பிக்சரில் தேசிய கொடியை வைத்துள்ளனர். மேலும், பலர் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தின தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் பிரதமர் மோடியின் வேண்டுகோள் எதையும் குறிப்பிடாமல் ஒரு அறிக்கையின் மூலம் வித்தியாசமாக அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அதில், “75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்து” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘மருதநாயகம்’ படத்தின் தொடக்க விழாவில், பிரிட்டிஷ் மகாராணி முன்னிலையில் கமல் பேசிய வீர வசனத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!