Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜவான் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்

latest-news-about-shah-rukh-khan movie

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் உள்ள இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம் பிடித்தவர் அட்லி.

இவரது இயக்கத்தில் தற்போது ஜவான் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஷாருக்கானை ஹீரோவாக வைத்து இந்த படத்தை இயக்கி இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் அட்லீ.

ஷாருக்கான் தனது சொந்த தயாரிப்பில் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆமாம் இந்த படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலால் ரசிகர்கள் ஷாருக்கான் அட்லியை நம்பி மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து இருப்பதாக கூறி வருகின்றனர். ரிசல்ட் எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

latest-news-about-shah-rukh-khan movie
latest-news-about-shah-rukh-khan movie