Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூரரைப் போற்று டிரைலர் ரிலீஸ்.. தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்.!!

soorarai pottru

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணதி பாலமுரளி நடிக்க மற்றும் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சூரரைப்போற்று படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகப் போகிறது என தகவல் பரவியது.

தற்போது இது குறித்து 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் சூரரைப்போற்று படம் பற்றிய பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நாள் சூரரைப்போற்று படத்தின் டிரெய்லர் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாவதாக வெளியான தகவல் உண்மையில்லை என்பது உறுதியாகி உள்ளது.