Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மரணத்தைக் குறித்து ஸ்ருதி கணவர் போட்ட ட்வீட்.!! இணையத்தில் வைரல்

latest viral news about vaani raani fame late husband

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.

இவர் கடந்த வருடம் அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிலையில் இவர்களுக்கு திருமணமான ஒரே வருடத்தில் அரவிந்த் சேகர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் பாரிஸில் இருந்து இவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்றை நல்ல நினைவுகளுடன் இறக்க வேண்டும் நிறைவேறாத ஆசைகளுடன் இல்லை என அரவிந்த் சேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதியின் கணவர் மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா என கவலையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.