தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவற்றில் ‘லத்தி’ திரைப்படத்தை ஏ வினோத்குமார் இயக்கியுள்ளார். இதில் விஷாலுடன் இணைந்து சுனைனா, பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ராணா புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் மூலமாக ரமணா மற்றும் நந்தா உள்ளிட்டோர் படத்தை தயாரித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் இருந்து மோஷன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர், இரண்டு பாடல்கள் உள்ளிட்டவை வெளியாக்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிறவைத்துள்ளது. இப்படியான நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான “வீரத்துக்கோர் நிறமுண்டு” என்றால் பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலை யுவன் மற்றும் எம்சி சன்னா இணைந்து பாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Presenting my favourite song from #Laththi that celebrate the colour of Valour & Bravery🔥#Veerathukkor_Niramundu lyrical video ▶️ https://t.co/kjLRjFunaU
A @thisisysr Musical #MCSanna @madhankarky #LaththiFrom22ndDec #LaththiCharge #Laati
— Vishal (@VishalKOfficial) December 19, 2022