உலகெங்கும் வாழும் முருக கடவுளின் பக்தர்கள் அனைவரையும் மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியது சர்ச்சை புனிதமான கந்த சஷ்டி கவச பாடலை யூடுயூப் சேனல் மிகவும் கொச்சை படுத்தி பேசியது தான்.
பல தரப்பிலிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால் பெரும் சர்ச்சையானது. ராஜ் கிரண், பிரசன்னா என பலரும் இவ்விசயத்தில் கோபத்துடன் தங்கள் கருத்தை பதிவிட்டு கொச்சையாக பேசியவர்களுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகரும், சேவகரும், ஆன்மிக நம்பிக்கை கொண்டவருமான லாரன்ஸ் மாஸ்டர் இந்த ஆடி கிருத்திகை நாளில் பதிவிட்டுள்ளார்.
இதில் அவர் தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்டு வளர்ந்ததாகவும், அம்மா தினமும் படிப்பதாகவும், அதன் சக்தியை தன் அறிந்துள்ளதாகவும், வீட்டில் தினமும் முருகன் சிலையை வணங்குவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்த சர்ச்சையை பற்றி அதிகமாக பேசி யாரையும் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். முருகனின் அழகு, அன்பு, சக்தியை மட்டும் பார்ப்போம். அதற்கு முன் எல்லாம் ஒன்றும் இல்லை. காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என கூறியுள்ளார்.