Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லாரன்சின் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு எப்போது? – வெளியான புதிய தகவல்

Lawrence about Chandramukhi 2

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. சுமார் ஓராண்டுக்கு மேலாக இப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாததால் இப்படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு 2022-ம் ஆண்டில் தொடங்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதற்கு முன் கதிரேசன் இயக்கும் ருத்ரன், துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் போன்ற படங்களில் நடித்து முடிக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளாராம்.