Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்துடன் நடிப்பது என் கனவு.. அந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி – பிரபல நடிகையின் அசத்தல் ட்விட்.!!

தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். பிரபு சாலமன் இயக்கிய இப்படம் லட்சுமி மேனனுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

இந்த படத்தை தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அதுமட்டுமல்லாமல் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்தின் தங்கையாக வேதாளம் படத்தில் நடித்திருந்தார்.

அஜித் மற்றும் லட்சுமி மேனன் காம்பினேஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்ணன் தங்கையாக இவர்களின் பாசம் அனைவரையும் உருக வைத்தது.

தற்போது இந்த படம் குறித்த அனுபவங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லட்சுமி மேனன்.

அதாவது அஜித்துடன் நடிப்பது என்பது என்னுடைய கனவு. அவருடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி. வேதாளம் எப்போதுமே என்னுடைய ஃபேவரைட் திரைப்படம்.

அஜித் மிகச்சிறந்த ஜென்டில்மேன், என்னுடைய ஹீரோ என பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி ரசிகர்களின் கருத்துக்கள்