நடிகரும், நடன இயக்குனரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை யாராலும் மறக்க முடியாது தானே. காமெடியுடன் திகிலான இப்படத்தில் அவர் திருநங்கையாக நடித்து அனைவரையும் கவர்ந்ததுடன் படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தன.
இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் லட்சுமி பாம் என ரீமேக் செய்துள்ளனர்.
தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தில் திருநங்கையாக அக்ஷய் குமார் நடித்திருக்கிறார். டிரைலர் இன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
டிரைலர் வெளியாக 5 மணி நேரத்திலேயே Youtube ல் 2.4 மில்லியன் பேரும், டிவிட்டரில் 1.1 மில்லியன் பேரும் பார்த்துள்ளனர்.
Brace yourselves for the Queen who's here to steal your heart away! Watch #LaxmmiBombTrailer and meet the kind of a family that you've never seen before!#FoxStarStudios #DisneyPlusHotstarMultiplex@akshaykumar @advani_kiara https://t.co/NQKfAW7Fpa
— Raghava Lawrence (@offl_Lawrence) October 9, 2020