Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் முன்னணி நடிகர், பிரபல இயக்குனர் கூறிய சூப்பர் தகவல்

Leading actor in Rajinikanth's biopic

இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர், இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி. தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா உள்ளிட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கி இருந்தார்.

கடைசியாக இவர் இயக்கத்தில் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியானது, இப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறியது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி அளித்துள்ள பேட்டியில், “நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிக பெரிய ரசிகர். அவரோட வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்க ஆசை.

அந்த படத்தில் நடிகர் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும்” என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.