சின்னத்திரையில் தொடர்ந்து நான்கு சீசன்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் 4 முடிவடைந்ததை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
அதுவும் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம், இந்தமுறை கலந்துகொள்ள போகிறார்கள் என்று ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.
அதன்படி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து, கனி, சிவாங்கி, தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் நடிகர் நடிகைகளில், ராதா ரவி, பூனம் பஜ்வா, உள்ளிட்டோர் கலந்துகொள்ள வாய்ப்புகள் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் முன்னணி நடிகையாக இருந்த ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.