கதாநாயகர்களாக இருக்கும் நான்கு பேரும் வருமானம் குறைவான வேலைகளை செய்து வருகின்றனர். அப்பொழுது ரோட்டில் 2000 ரூபாய் நோட்டு ஒன்று கிடக்கிறது அதனை மணிகண்டன், கருணாகரன்,ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய நான்கு பேரும் ஒன்றாக எடுக்கின்றனர். இதனை எப்படி பங்கு போடுவது என குழப்பம் ஏற்படுவதால் அந்த 2000 ரூபாய்-க்கு பக்கத்தில் இருக்கும் பாரில் சென்று குடிக்க முடிவு செய்கின்றனர். இந்த பாரை மொட்டை ராஜேந்திரன் நடத்தி வருகிறார்.கடைசியில் அந்த 2000 ரூபாய் கள்ள நோட்டு என தெரிய வருவதால் பிரச்சனை ஏற்படுகிறது இந்த 4 பேரை பிடித்து வைத்துக் கொள்கின்றனர்.அப்பொழுது பாரில் எதிர்ப்பாராத அசாம்பாவிதம் நடைப்பெறுகிறது, அந்த பிரச்சனைக்கு இந்த 4 பேரும் சம்மந்தம் உள்ள நபர்களாக கூறப்படுகிறது.பாரில் நடந்த பிரச்சனை என்ன? அதற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை
குயில் என்ற கதாபாத்திரத்தில் சவுரி முடி வியாபாரம் செய்பவராக நடித்திருக்கும் மணிகண்டன், கிளி ஜோதிடராக நடித்திருக்கும் கருணாகரன், பேய் விரட்டுபவராக நடித்திருக்கும் ஸ்ரீநாத், பலகுரல் கலைஞராக நடித்திருக்கும் ரமேஷ் திலக் என நான்கு பேரும் வறுமை கதாப்பாத்திரத்தில் பசியோடு சுற்றினாலும், ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
விடிவி கணேஷ், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எஸ்.ஏ.பத்மநாபன், கிரைம் திரில்லர் ஜானரை நகைச்சுவை பாணியில் சொல்ல முயற்சித்துள்ளார், நடித்திருப்பதோடு படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீநாத். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுதிருக்க வேண்டும். படத்தின் முதல் பாதி காட்சியமைப்பு இன்னும் சிறப்பாக இருந்து இருந்தால் கூடுதலாக ரசிக்கப்பட்டிருக்கும்.
ஒளிப்பதிவாளர் மாசாணியின் கேமரா காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது.
இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் பலமாக அமைந்துள்ளது.
Hero Cinemas நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.