சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சரவணன் லெஜன்ட் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இவரது இரண்டாவது படம் பற்றி அடிக்கடி தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது, தனுஷின் கொடி, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, சூரியின் கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கி வரும் துரை செந்தில் குமார் தான் லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த லெஜன்ட் சரவணனின் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.